திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: டிலான் பெரேரா

Dilanprerera-440x300இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சியால் எந்த ஒரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சினர் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கருத்து தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதியுச்ச அதிகாரங்களை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முயற்சித்துவரும் நிலையில் சிறப்பு அமைச்சு முறைமையை உருவாக்கி அதிகாரங்களை கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயக ரீதியில் எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயினும் அல்லது புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டுமாயினும் எமது ஆதரவுக்காக காத்திருக்கவேண்டி வருமெனவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக போன்ற உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகது.

முகப்பு
Selva Zug 2