திங்கள், 20 பிப்ரவரி 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
Journalist_1

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

download-2-3-450x264கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்குமாறு கோரி அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டம் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தினால் இன்று வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் இன்று காலை 9 மணி முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

இதன்போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் நீதியை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகப்பு
Selva Zug 2