திங்கள், 23 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீள் வழங்க மாட்டோம்: இலங்கை திட்டவட்டம்

mahinda-1-450x300அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளையும் கடற்தொழில் உபகரணங்களையும் கையளிக்க முடியாது என கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது இந்திய கட்ற்றொழிலாளர்களின் 122 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த படகுகள் மீள் கையளிக்கப்பட மாட்டது எனவும் அவை அரசு உடமையாக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்தால் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முகப்பு
Selva Zug 2