செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

மாணவர்கள் படுகொலை; ஐந்து பொலிஸாரும் நீதிமன்றத்தில்

jaff-450x300யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக 3 ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2