ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேர்ச்சி அடையாத அதிபர்களிற்கும் சலுகை

Screenshot_8வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேர்ச்சி அடையாத அதிபர்களிற்கும் சலுகைகளை வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சு முன்வந்துள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் பணிபுரிந்து அதிபர் சேவைக்குத் தகுதி பெறத்தவறிய கடமை நிறைவேற்று அதிபர்கள் நேற்றைய தினம் தமக்கு தொடர்ந்தும் அதிபர் தரம் வழங்ககோரி ஓர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தனது அலுவலகத்தில் சந்தித்தவேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாகவுள்ளோரில் 50 வயதைக் கடந்தவர்கள் , அதிபர் தரத்திற்குத் தேர்வானவர்கள் மற்றும் அதிபர் சேவைக்கான பரீட்சைக்குத் தோற்றாதோர் அனைவரும் தொடர்ந்தும் அதிபராக சேவையாற்ற வழி ஏற்படுத்தக்படும். அதேவேளை அதிபர் தரத்திற்கான பரீட்சையில் தோற்றி சித்தியெய்த தவறியவர்கள் அதிபர்களாக பணியாற்றமுடியாது. இருப்பினும் அவர்களிற்கான சேவையை கருத்தில் கொண்டு அவர்களிற்கும் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் ஆசிரிய ஆலோசகர்கள் , திட்ட உத்தியோகத்தர்கள் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் பணி போன்றவற்றினை விரும்பினாலும் அந்த பணிக்காக நியமிக்கப்படுவார்கள். இதேபோன்று அதிபர் தரத்தில் சித்தியெய்திய புதிய அதிபர்கள் நியமனத்தின் பின்பு ஏற்படும் வெற்றிடப்பாடசாலைகளிற்கும் விரும்பும் நியமிக்கப்படுவர்.

இதேநேரம் அதிபர் தேர்வில் தோற்றாத கடமை நிறைவேற்று அதிபர்களிற்கும் அதிபராக பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவதான அறிவித்தலுக்கமைய கடமை நிறைவேற்று அதிபர் பரீட்சையில் தோற்றியதை மறைத்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. என்றார்.

முகப்பு
Selva Zug 2