ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

தமிழர்களின் இருப்பை மறைக்கும் செயற்பாட்டிற்கு சார்பாக அரசும் செயற்படுகிறது

shanthi-sriskantharasaதமிழர் தாயக பிரதேசத்தில் தமிழர்களின் இருப்பை மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அரசாங்கமும் புத்தசாசன அமைச்சும் அவர்களுக்கு பரிந்துரைத்து பேசுவது வேதனையான விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்துமாமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை சுமந்து வாழும் மக்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் கைங்கரியங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, தமிழ் இனத்தையும் மதத்தையும் அடையாள சின்னங்களையும் இருப்பையும் அளிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில், அதுவும் இந்து ஆலயங்களுக்கு அருகே புத்தர் சிலைகளை புதிது புதிதாக அமைப்பதும் தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதும் தமிழர் இருப்பை மறைத்து எதிர்காலத்தில் பெரும்பான்மையினத்தின் இருப்பை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளாகுமென சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பௌத்த சமயத்தை வளர்ப்பதற்கென நிதியொதுக்கிடு செய்வதும் பௌத்த தேரர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீட்டை செய்வதும் என அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கையை நாமாகவே எடுப்பதற்கு தவறினால் வருங்கால சந்ததிக்கு குற்றமிழைத்தவர்களாக மாறிவிடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மேலும் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2