வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விமானப்படை வீரர் உயிரிழப்பு

deth bodyவவுனியா விமானப்படை தளத்தில் நேற்று இடம்பெற்ற வருட இறுதி களியாட்ட நிகழ்வில்கலந்து கொண்ட விமானப்படை வீரர் ஒருவர் மது போதையில் மோட்டர் சைக்கிளை செலுத்திவிபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்தெரியவருவதாவது,
வவுனியா விமானப்படைத் தளத்தில் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நேற்றுஇடம்பெற்றிருந்தது.

இதன்போது விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் அருணசாந்த(வயது 31) என்ற விமானப்படை வீரர் மதுபோதையில் விமானப் படைத்தளப் பகுதியில் உள்ள தனதுவீட்டிற்கு மோட்டர் சைக்கிளை செலுத்திய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர்சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குறித்த விமானப்படை வீரர் பலத்த காயமடைந்து மரணமடைந்தார்.

அவரது சடலம்தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியாபொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முகப்பு
Selva Zug 2