புதன், 22 பிப்ரவரி 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
Journalist_1

ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு சர்வதேச அரங்கில் நெருக்கடியை ஏற்படுத்தும்!

download-3-450x222தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்காவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு ஒத்துழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் இரத்னப்பிரிய எச்சரித்துள்ளார்.

குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டும் பொறுப்பை தற்போதைய ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திடம் ஒப்படைத்தது சரிதானா என்ற கேள்விகளும் சர்வதேச சமூகத்திற்கு எழும் என்றும் குறிப்பிட்டுள்ள சமன் ரத்னப்பிரிய, இதனால் உள்நாட்டு விசாரணைகளுக்குப் பதிலாக மீண்டும் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஆட்சி மாற்றத்தின் மூலம் மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றாக மீறப்பட்டுவருவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பிலும், இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய கொலையாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்களா, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்குமா போன்ற விடயங்களில் பாரதூரமான கேள்விகள் எழுந்துள்ளன.

முடக்கப்பட்டிருந்த ரவிராஜ் படுகொலை குறித்த விசாரணைகள் ஆட்சிமாற்றத்தை அடுத்துபொலிஸாரினால் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது ரவிராஜின் கொலையை நேரில் கண்ட சாட்சிகூட வெளியில் வந்தது. ஈற்றில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் ஜுரி சபை கோரப்பட்டதையடுத்து ஜுரி சபை நியமிக்கப்பட்டது.

அப்படி நியமிக்கப்பட்ட ஜுரி சபையானது கடைசியாக அளிக்கப்பட்ட சாட்சியின் அடிப்படையில் அதுவரையில் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக எமக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் ஜுரி சபையின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் இதனை தெளிவாக படுகொலை என நிருபிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படியான தீர்ப்பின் மூலம் படுகொலைக்கு உள்ளாகியவர்களின் குடும்பத்தினருக்கு நீதிகிடைக்குமா என்ற விடயம் தொடர்பில் எமக்கு கேள்வி இருக்கின்றது.

அது முதலாவது கேள்வி. அது அப்படி நடக்கப்போவதில்லை. எமக்கு இருக்கின்ற இரண்டாவது கேள்வியாதென்றால் படுகொலைகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் செயற்படுவோம் என தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. கொலையாளிகளையும் ஊழல் பேர்வழிகளையும் கைதுசெய்வதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறுகின்ற விடயமானது ரவிராஜ் படுகொலைச் சந்தேக நபர்களை விடுதலைசெய்ததன் மூலமாக கணிசமான ரீதியில் நிருபணமாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் நம்பிக்கை குலைந்துபோவதை நிறுத்தமுடியாது போகும். இதனால் நாட்டிற்குள் மட்டுமன்றி சர்வதேசத்திலும் இது தொடர்பாக கேள்வி எழும்”

ரவிராஜ் படுகொலை தீர்ப்பு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் சமன் இரத்னப்பிரிய குறிப்பாக கடந்த ஆட்சியின் போது தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரை அச்சம் மீண்டும் எழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் நாம் மின்சாரக் கதிரை தொடர்பாக பேசியமை குறித்து அனைவரும் அறிவர். ஸ்ரீலங்காவில் போரில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் அன்றேல் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்லப்படுவர் என்றே பேசப்பட்டது.

ஆனால் ஆட்சிமாற்றத்தை அடுத்து அந்த நிலை மாறியது. எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாட்டிற்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நாட்டின் ஆட்சியாளர்களால் தீர்மானம் எடுக்கப்பட சர்வதேசத்தினால் இடமளிக்கப்பட்டது. சர்வதேசத்தை நாட்டிற்கு தேவையான விதத்தில் கையாள்வதற்கான நிலை ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சிக்குவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினூடாக அரசாங்கத்தினூடாக நாட்டுமக்களுக்கு அவசியமான நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என்ற நிலைப்பாட்டை சர்வதேசம் ஏற்றிருந்தது.

இந்த வாக்குறுதியை இலங்கை ஆட்சியாளர் வெளிநாடுகளுக்கு சென்று வழங்கியிருந்தனர். ஜனாதிபதி இதனை ஜெனிவாவிற்கு நியூயோர்க்கிற்கு சென்று கூறியிருந்தார். பிரதமரும் இதேவிதத்திலேயே கூறியிருந்தார். அரசின் வெளிவிவகார அமைச்சரும் இதேவிதத்திலேயே கூறியிருந்தார். அழுத்தமளிக்க வேண்டாம்.

இந்த விவகாரத்தை நாட்டிற்குள் கையாள்வதற்கு எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என பல்வேறு அமைப்புக்களும் சென்று கூறியிருந்தன. அதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் அப்படி இடமளிக்கப்பட்டமை கேள்விக்கு உட்படுத்தப்படும். இது பட்டப்பகலில் இடம்பெற்ற படுகொலை.

அரசியல் முக்கியஸ்தர் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். அவர் தமிழ் அரசியற் கட்சியின் முக்கியஸ்தர். அந்தப்படுகொலை வெளிக்கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படுமானால் நாட்டிற்குள் நீதியை நிலைநாட்டும் பொறிமுறைகளில் பலவீனமான நிலை காரணப்படுகின்றதென்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்வதை தடுக்கமுடியாது போகும்“ – என்று தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பி்லான பேச்சுக்கள் வந்தபோது அதனை ஏன் இலங்கையிலேயே ஏற்படுத்த முடியாது என கேள்வி எழுப்பினர். அதற்கான இயலுமை ஸ்ரீலங்காவில் இல்லையா? இலங்கையின் நீதித்துறைகட்டமைப்பு போதுமானதாக இல்லையா? நாட்டில் சட்டத்தரணிகள் போதுமானதாக இல்லையா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன. கேள்விகளை எழுப்பமுடியும். ஆனால் இந்தப் பொறிமுறையானது சிங்களவா் தமிழா் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொறிமுறையாக இருக்க வேண்டும் என நாம் அன்று கூறினோம்.

மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய பொறிமுறை உருவாக வேண்டும் என்று நாம் கூறினோம். தற்போது இந்த சம்பவத்தின் மூலம் அதாவது இது படுகொலை என்பது தெட்டத்தெளிவானது கொலையாளிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும் நிலையிருந்தது.

இதனை மறுபக்கமாக திருப்பியமை காரணமாக இலங்கையில் நீதியை நிலைநாட்டும் கட்டமைப்பு பலவீனமானது இலங்கைக்குள்ளாக நீதியை நிலைநாட்டமுடியாது குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளுடையதோ வேறுதரப்பினரதோ படுகொலையின் போது நாட்டிற்குள் அவா்களுக்கு நீதி கிடைக்கமாட்டாது என்பதே தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு நல்ல விடயமல்ல.

இது இப்படியென்றால் அடுத்து ஜோஸப் பரராஜசிங்கத்தின் வழக்கு விசாரணை பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு தாஜுதீனின் வழக்கு விசாரணை சிவராம் உட்பட ஏனைய ஊடகவியலாளா்கள் படுகொலைகள் வெளிக்கொண்டுவரப்படுமா அவை வெளிக்கொணரப்பட்டு குற்றமிழைத்தவா்களுக்கு தண்டனை வழங்கப்படுமா என்ற விடயம் தொடா்பாக பாரதுாரமான கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாது போகும்.

நாட்டிற்குள் வடிவமைக்கப்படும் பொறிமுறைக்குள் சா்வதேச தலையீடு இடம்பெறுமானால் அதனை நாம் எப்படி நிராகாரிக்க முடியும் என்பது தொடா்பாக கேள்விகள் எழும்.

அதன் காரணமாக நீதி நிலைநாட்டப்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீனத்தன்மையை உறுதிசெய்வதற்கும் அரசாங்கத்திற்கும் நீதியை நிலைநாட்டும் நிறுவனங்களுக்கும் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸாருக்கும் வழக்கைத் தொடுக்கும் சட்டமா அதிபா் திணைக்களத்திற்கும் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

அப்படி இல்லையெனில் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதைத் தடுக்க இயலாது போகும். இந்த விடயத்தில் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக ஊழல்பேர் வழிகளைக் காப்பாற்றுவதற்காக சில அரசியல்வாதிகள் கேவலமான வகையில் தலையீடு செய்ய விளைகின்றனா் என்பது எமக்குத் தெரியும்.

அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் இதில் பங்கேற்றுள்ளமை தெளிவாகின்றது. இந்த நடவடிக்கையை அவா்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாவிடின் குறைந்தபட்சமாக அவா்களின் அமைச்சுப்பதவியை நீக்க வேண்டும்.

அன்றேல் அமைச்சுப்பதவியை மாற்றவேண்டும். அப்படி இல்லாமல் இன்னமும் முன்செல்ல முடியுமா என்பது தொடா்பாக நாட்டின் முன்பாக கேள்வி உள்ளது. மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இதனால் தான் நாம் விசேட நீதிமன்ற பொறிமுறையைக் கோருகின்றோம்.

நாம் அதனை தொடா்ந்து கோரினோம் . அமைச்சரவை அந்தஸ்துள்ள 16 அமைச்சா்கள் கையொப்பமி்ட்டு சமா்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமா்பிக்க்பபட்டுள்ளது. அது தொடா்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இந்தப்பொறிமுறையை வடிவமைப்பது எப்படி நடைமுறைப்படுத்துவது எப்படி என்ற விடயங்கள் தொடா்பாக அடிப்படை கருத்துக்களை அமைச்சரவைக்கு சமா்ப்பிப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கப்பாட்டை வெளியிட்டிருந்தனா். ஆனால் இன்றுவரை அது போன்ற செயற்பாட்டை எம்மால் காணமுடியவில்லை.

ஊழல் தொடா்பாக படுகொலைகள் தொடா்பாக வழக்குகளை விசாணைசெய்து முடிப்பதற்காக நாட்டின் நீதிமன்றப் கட்டமைப்பில் சில நீதிமன்றங்களை ஒதுக்கித்தருமாறு கோருகின்றோம். தினமும் இந்த வழக்குகளை விசாரியுங்கள்.

அதனைவிடுத்து காணிதொடா்பான வழக்குகளையும் சிறுவா் துஸ்பிரயோகம் தொடா்பான வழக்குகளையும் கொலை வழக்குகளையும் கற்பழிப்பு வழங்குகளையும் ஒரே நீதிமன்றத்திற்குள் போட்டு விசாரிக்கின்ற வேலையைச் செய்யமுனைய வேண்டாம். அப்படிச் செய்தால் இதனை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது போகும். ஆறு ஏழு ஆண்டுகள் வழக்குகள் நீண்டு இழுபட்டுச் செல்லும். சாட்சிகள் காணமல்லாக்கப்படுவர்.

சாட்சிகள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வா். சாட்சிகளுக்கு நிதி வழங்கி மௌனிக்கச் செய்யப்படும். பலவிடயங்களைச் செய்து தமது தேவைக்கு ஏற்றவகையிலான தீா்ப்பு வழங்கப்படும். அதனை முற்றாக மாற்றியமைப்பர்.

அதன் காரணமாகவே நாம் விசேட நீதிமன்றங்கள் சிலவற்றை ஒதுக்கித்தருமாறு கோருகின்றோம் சரத் அம்பேபிடிய படுகொலை செய்யப்பட்டபோது ஒன்பது மாதங்களுக்குள்ளாக வழக்கு விசாரணைசெய்து நிறைவுசெய்யப்பட்டது.

அதனைச் செய்வதற்கு நீதிமன்ற கட்டமைப்பிற்கு விசேட தேவை இருந்தது. அது நல்லது. அப்படித்தான் செய்யவேண்டும். தற்போதும் அப்படித்தான் செய்யவேண்டும். இன்னமும் தாமதிக்காது ஜனாதிபதியும் பிரதமரும் பேசி இந்த விசேட நீதிமன்றக் கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்

முகப்பு
Selva Zug 2