வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

காட்டிக்கொடுத்தார் அன்ரனி ஜெகநாதனின் மகன்!

peter ilachaeliyanமுல்லைத்தீவு நகரில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் விசாரணைக்குள்ளாகியுள்ளனர். சிலை வைப்பிற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவு செய்ததாகவும் அதனால் இவர்கள் தான் சிலையை வீழ்த்தியிருப்பார்கள் என சந்தேகிப்பதாகவும் முறைப்பாடு பதியப்படடதையடுத்தே இவர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். விசாணைக்குள்ளாக்கப்பட்டவர்களுள் ஒருவர் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மகனென சொல்லப்படுகின்றது.

குறித்த மூன்று தமிழ் இளைஞர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் இணைப்பு செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனின் மகனுமான பீற்றர் இளஞ்செழியன் செய்த முறைப்பாட்டையே அடுத்து விசாரணை வளையத்தினுள் குறித்த மூன்று இளைஞர்களும் கொண்டுவரப்பட்டதாக தெரியவருகின்றது.

ஏதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தல் கனவிலிருக்கும்  பீற்றர் இளஞ்செழியன் தனது மகனுடன் முரண்பட்டு செயற்பட்டுவந்திருந்தார். எனினும் ஜெகநாதனின் மரணத்தையடுத்து அரசியல் கனவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுடன் இணைந்து செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2