வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2தாய்மடியில்

03/01/1951சிவனடியில்

04/10/2002

ஆழ்வார்பிள்ளை சிவசோதி
பிறப்பிடம்: குடத்தனை மேற்கு
வதிவிடம்: பியல்லா, இத்தாலி

வேர்களில் இருந்து கசியும்
நீராய் தந்தையே உங்களின்
நினைவுகள்
எங்களுக்குள்

ஆண்டுகள் பதினைந்து  ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்
இன்றுவரை இனியாரும் இல்லை

ஐயா! எமக்கு இப் புவியில்
எங்களுக்கு இழந்த துயர் நீக்க
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
பாசத்தின் பிரமாண்டமே
பெறுதலுக்கரிய பொக்கிஷமே,
வீழ்த்தமுடியா வைராக்கியமே,
இருள் அழித்த ஒளியே,
நீங்கள்  மற்றவர்களால் உணரமுடியாத உயரம்
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உங்களைப்போல்  யாருளரே!

ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீங்கள்
வரமுடியாதா மறுமுறையே ?

என்றும் உங்கள் நீங்காத நினைவில் …

இத்தருணத்தில் இத்தாலி மேற்பிராந்தியம், Ponzone (Trivero, Biella), வாழ் மக்களுக்கும் இத்தாலியில் வசிக்கும் அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தாரின் அன்பையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறோம்.

தகவல் மகன்: சி. சதீசன்
தொடர்புகள்: babytiger@live.co.uk