வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீடு டிசம்பரில் விசாரணைக்கு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன அகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.

யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் எனவே தம்மை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கூறி குறித்த ஏழு பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.

No comments