தினக்குரல் ஊடகத்திற்கு ஆர்னோல்ட் பகிரங்க மிரட்டல்


வலம்புரிப் பேப்பறைத் தூக்கி சபையில நான் மஞ்சள் பத்திரிகை என்று சொன்னான். உன்ர பத்திரிகையைச் சொல்வதற்கு எனக்கு கனநேரம் செல்லாது என தினக்குரல் பத்திரிகையை கடுமையாக சாடியிருக்கும் யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நீங்கள் எழதுவதை எழுதுங்கள் நான் இருக்கும் காலத்தில் செய்யவேண்டியதைச் செய்தே தீருவேன் என ஊடகங்களை மிரட்டும் பாணியில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இம்மானேவேல் ஆர்னோல்ட் அரசியலுக்குள் நுளைந்த காலத்திலிருந்து. ஊடகங்களைத் தொடர்ச்சியாக வசைபாடிவருகிறார். அவர் வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக இருந்தபோது வலம்புரிப் பத்திரிகையைத் தூக்கிக் காட்டி இது மஞ்சள் பத்திரிகை எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது வலம்புரியை மிரட்டிய அதே பாணியில் தினக்குரல் பத்திரிகையை அவர் மிரட்டியிருக்கிறார்.



அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்ல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்காக தனது பணிக்காக வழங்கப்பட்டிருந்த வாகனத்தைக் கோரியிருக்கிறார். அது மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சபை அமர்வு ஒன்றில் மனைவிமுன் அவமானப்பட்டுவிடக்கூடாது என்பதற்காய் வாகனம் கோரினேன் என்ற கருத்துப்பட குறிப்பிட்டிருந்தார். குறித்த செய்திகைளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இதனால் ஆர்னோல்ட் கோபமடைந்திருக்கிறார். அதனையடுத்து தினக்குரல் பத்திரிகைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பேசியதாக அவரே மக்கள் சந்திப்பென்றில் குறிப்பிட்டிருக்கிறார்.


அவர் தினக்குரல்பத்திரிகையை பேசியதாக தானே குறிப்பிட்டவை வருமாறு,

“தினக்குரலைப் பாருங்கள் என்ர மனுசியையும் கோர்த்து ஏதோ சம்பந்தமில்லாத கதை எழுதியிருக்கிறாங்கள். எனக்கு என்ன நியூஸ் எண்டே தெரியேல்ல. காலமை எடுத்து குடுத்தன் எண்டா தினக்குரலுக்கு. வயிறு வளக்கிறதுக்கு வேற வழி இல்லையே எண்டு. இப்படித்தான் கேட்டன். நீ பேப்பறில் எழுதினால் நான் பயந்திடுவேன் என்றா நினைச்சுக்கொண்டிருக்கிறாய். உங்கண்ட உந்தப் பேப்பர் நியூஸ் எல்லாம் அடுத்தமுறை வாக்குச் சேக்கிறவனுக்கு. எனக்கு இருக்கிற காலத்தில என்னென்ன செய்யேலுமோ அவ்வளவும் நடக்கும். நீ உன்ர பாட்டில எழுதுறது எல்லாத்தையும் எழுது. இவ்வளவு நியூஸ் ஒருநாள் முழுக்க இருந்து கதைக்கிறம். அறிவு பூர்வமான ஆரோக்கியமான கதைச்சம் ஒன்று போட்டியா.

சம்பந்தமே இலலாத நியூசைப் போடுறாய் உனக்கு வெட்கமே இல்லையா. தினக்குரல்..... வலம்புரிப் பேப்பறைத் தூக்கி சபையில நான் மஞ்சள் பத்திரிகை என்று சொன்னான். உன்ர பத்திரிகையைச் சொல்வதற்கு எனக்கு கனநேரம் செல்லாது. பத்திரிகைக்குப் பயந்து வீங்கிற ஆள் நான் எண்டு நினைக்காதே விளங்குது தானே” - என்றர்.

No comments