புலம்பெயர் தமிழர் பணத்தைக் குறிவைக்கும் சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள்



வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையாளியான இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக மேற்கில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது?," என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.

No comments