புத்துயிர் பெறும் படைமுகாம்கள்:நிதியும் ஒதுக்கீடு!

வடகிழக்கில் கிராமங்களை மீளக்கட்டியெழுப்பும் திட்டமெனும் பேரில் படைமுகாம்களை மீள்புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கெனஅமைச்சரவையில் விசேட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக வடக்கில் அரச காணிகளை கையகப்படுத்தி புதிய படைத்தளங்கள் அமைக்கப்பட்டுவருவதுடன் அவற்றினை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலிகள்,காவலரண்களை படைத்தரப்பு அவசர அவசரமாக படையினர் அமைத்துவருகின்றனர்.

இதனிடையே மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் கடற்படைத்தளங்களிற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாதென வடக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

போர் முடிவுற்ற பின்பும் புதிதாக படை முகாம் அமைக்கும் தேவை கிடையாது. அந்த வகையில் புதிதாக அமைக்கும் 4 கடற்படையினரின் தேவைக்காக தலா 2 ஏக்கர் வீதம் கடற்கரை பிரதேசத்தில் 8 ஏக்கர் நிலம் என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகவே அமையும். அதாவது மன்னாரில் உள்ள கடற்படை தளங்கள் பல சுற்றுலா மையங்கள் போன்றே இயங்குகின்றன. அதனால் குறித்த நிலங்களை வழங்க முடியாது.

மன்னாரின் கடற்கரையோரம் பல கடற்படையினர் மட்டுமன்றி ஏனைய திணைக்களங களின் பிடியில் இருப்பதனால் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களிற்கான திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் மேலும் நிலத்தை கோருவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாகவே அமையுமென மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

No comments