நாவற்குழியிலுள்ள தமிழ் குடும்பங்களை விரட்ட அரசு சதி?


நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 தமிழ் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச அமைச்சரான சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கையினை விடுத்துள்ளது.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் 107 தமிழ் குடும்பங்கள் வசித்துவருகின்றன.அங்கு குடியமர்ந்துள்ள குடும்பங்களை காணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அக்காணியை கையகப்படுத்த அரசாங்கம் வழக்கு தொடுத்துள்ளது.

ஏற்கனவே அங்கு சிங்கள குடும்பங்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள போதும் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களை வெளியேற்ற அரசு முனைப்பு காட்டிவருகின்றது.

இதனிடையே குறித்த பிரதேசத்தில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு;ள்ள சிங்கள குடும்பங்களிற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டம் வழங்கப்படுவதற்கு மாவை சேனாதிராசா முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments