தனித்து தமிழரசு பேச மீனவர்கள் எதிர்ப்பு!

சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பிற்கெதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் போராட்டத்தை முடக்க முழு அளவில் சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் இலங்கை மீன்பிடி அமைச்சரை எதிர் வரும் 12ம் திகதி முல்லைதீவிற்கு தருவிக்க தமிழரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் வளத்தை அளிக்கும் சுருக்கு வலைத் தொழிலைத் தடை செய்தல்,தென்னிலங்கையிலிருந்து அத்துமீறி பிரவேசித்துள்ள மீனவர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி உள்ளுர் மீனவர்கள் தொடர்ச்சியாக நீரியல்வளத் திணைக்களம் முன்பாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.அவர்களது போராட்டத்திற்கு தீர்வினை எட்டும் நோக்கில் அரச அமைச்சரை தருவிக்க தமிழரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் தமிழரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை மீன்பிடி அமைச்சருடன் மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பில் பேசுவதாக தெரிவித்திருந்தனர்.

எனினும் அதனை நிராகரித்திருந்த மீனவ அமைப்பு பிரதிநிதிகள் வழமை போல தெற்கில் எங்களை விற்பனை செய்வதை அனுமதிக்க மாட்டோமென குரலெழுப்பியிருந்தனர்.

இதையடுத்து குறித்த சந்திப்பில் மாவட்ட மீனவர்களின் பிரசன்னத்தை முன்னிறுத்தி அந்த மாவட்டத்திலேயே அனைவரும் சந்திக்கவேண்டுமென கோரப்பட்டது.

இதனையடுத்து எதிர்வரும் 12ம் திகதிய கூட்டத்தில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் மாவட்ட நாடாளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்களுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments