எலும்புக்கூடுகள் மீட்பு யுத்தத்திற்கல்லவாம்?



வடக்கில் சிற்சில எலும்புக் கூடுகளும் மீட்கப்படுவதானது, வடக்கில் மீண்டுமொரு யுத்தத்துக்கான ஆரம்பமாக அமையாதென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

வடக்கில் இன்று, இராணுவத்தினர் அமைதியான முறையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வடக்கிலுள்ள இரத்த வங்கிகளில், இராணுவம் உள்ளிட்ட முப்படையினரினதும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளதும் இரத்தமே நிரம்பி வழிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவது போல், வடக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினத்தவர்களுக்கு, பெரும்பான்மையினத்தவர்கள் இரத்தம் வழங்கினால், அந்த இரத்தத்தோடு, சிறுபான்மையினத்தவர்களின் இரத்தம் கலக்கப்படாதாவெனக் கேள்வியெழுப்பியதுடன், அப்படிப் பார்க்கும் போது, ஆதிகாலத்திலிருந்தே, எமது இரத்தத்தில் கலப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று, வடக்கிலுள்ள இராணுவத்தினரின் கைகளில் துப்பாக்கிகள் இல்லையெனத் தெரிவித் அவர், மாறாக சமாதான ஒலிவ் கிளைகளே உள்ளனவெனவும் தெரிவித்தார்.

அவர்கள் தான் இன்று வடக்கில், வைத்தியசாலைகள், பாடசாலைகளை அமைக்கின்றார்களெனவும் கோவில் பூஜை விடயங்களில் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும் போது, வடக்கு மக்களால் இன்று இராணுவத்தினர் நிராகரிக்கப்படவில்லையென்பது தெளிவாகிறதென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments