தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்


யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டிய நிலையில் 9 வைத்தியர்களே உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் குறத்த வைத்தியசாலை வைத்தியர்கள் அந்த 9 வைத்தியர்களில் 5 வைத்தியர்கள் இடமாற்றம் பெறவுள்ள நிலையில் 4 வைத்தியர்களுடன் புற்றுநோய் வைத்தியசாலை இயங்க முடியாத நிலையில் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.


மேற்படி விடயம் குறித்து இன்று காலை யா ழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே வைத்தியர்களான த.காண்டீபன், சு.நிஷாந்தன் ஆகியோர் மேற்கண்டவாறு கூறினர்.


இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்,

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய சாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும்.

 ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள் அவர்களிலும் 5பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின் புற்றுநோய் வைத்தியசாலையில் 4 வைத்தியர்களே கடமையாற்றவுள்ளனர்.

 இது மோசமான நிலையாகும்.

இந்த நிலையில் வருடாந்த இடமாற்றத்திற்கு அமைவாக பருத்துறை ஆதார வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை

ஆகியவற்றில் இருந்து தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் இடமாற்றம் பெறவேண்டும். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன

 வைத்தியர்களை இடமாற்றியுள்ளனர்.

ஆனால் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து எமக்கு வரவேண்டிய வைத்தியர் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை.

 இதற்கு காரணம் பருத்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அங்கிருந்து தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெறவேண்டிய வைத்தியரை தடுக்கிறார்.


இது தொடர்பாக பிராந்திய சுகாதார சே வைகள் பணிப்பாளர் மற்றும் மகாணா சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஆகியோருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியு ள்ளபோதும் நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் அந்த விடத்தை பணிப்பாளருடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். அதனடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாகாண சுகாதார அமைச்சு

பணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதே போல் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு வெள்ளிகிழமைக்கு முன் பதில் கிடைக்கவேண்டும். இல்லையேல் வெள்ளிக்கிழமை

வைத்தியர்கள் நாம் அடையாள வேலை புறக்கணிப்பை செய்வோம் எனவும் கூறியுள்ளனர்.

No comments