சைபீரியாவில் உலங்கு வானூர்திகள் ஒன்றோடு ஒன்று மோதின! 18 பேர் பலி!

ரஷிய நாட்டை சேர்ந்த இரு உலங்கு வானூர்திகள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

ரஷிய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள துருகான்ஸ்க் மாவட்டத்தில் இருந்து இன்று இரு  Mi-8 உலங்கு வானூர்திகள் புறப்பட்டன. ஒரு உலங்கு வானூர்தியில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

மற்றொரு உலங்கு வானூர்தியில் அந்த எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 பணியாளர்கள் உள்பட 18 பேர் பின்னால் செல்ல புறப்பட்டனர் . அந்த உலங்கு வானூர்தி மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதியின் மீது மோதி கீழே விழுந்தது.

விழுந்த உலங்கு வானூர்தி தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் அதில் இருந்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொரு உலங்க வானூர்தி பத்திரமாக சென்று சேர்ந்ததாக தெரிய வந்துள்ளது.

No comments