Header Shelvazug

http://shelvazug.com/

குரோசியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

பிபா (FIFA) 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்றுக்கொண்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் இன்று (15) பிரான்ஸ், குரோஷிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. 

போட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. 


ஆனால் 8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். 

17 வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸூக்கு கோல் கிடைத்தது. இப்போட்டி மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்றது. 


முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலைப் பெற்றது. 2 வது பாதி நேரம் போட்டி தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 

48 வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் காப்பாளர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. 

தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர். 

59 வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். 

கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3 - 1 என முன்னிலைப் பெற்றது. 


65 வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4 - 1 என முன்னிலைப் பெற்றது. 

9 வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ் வீரர் பாதிகாப்பாக கோல் காப்பாளர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது. 

இதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4 - 2 எனக் குறைந்தது. அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. 

இதனால் பிரான்ஸ் 4 - 2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.