ஒப்பாரிகளால் அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம் !


காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும் இந்த அலுவலகம் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையே எனத்தெரிவித்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தடாலடியாக நடத்திய போராட்டம் அனைத்து மட்டங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காணாமற் போனோர் அலுவலகத்தின் யாழ்.மாவட்ட அமர்வு இன்று சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடந்துகின்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை பதிவு செய்து மண்டபத்தினுள் புகுந்து குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. இதனையடுத்து அவசர அவசரமாக இலங்கை காவல்துறை தருவிக்கப்பட்டது.அவர்கள் போராட்டகாரர்களிடமிருந்து அலுவலக பிரதிநிதிகளை காப்பாற்ற முற்பட்டிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கண்ணீரால் வீரசிங்கம் மண்டபம் நிறைய வந்திருந்த அதிகாரிகள் தர்மசங்கடத்தில் திண்டாடினர்.

அதேபோன்று காணாமல் பேர்னோர் தொடர்பில் குரல் கொடுத்து வந்த யாழ்.ஆயர் இல்லமும் சரி,அதனோடு தொடர்புட்ட மததுறவிகளும் சரி எட்டிக்கூட பார்த்திராத போராட்டமே யாழில் நடைபெறுகின்றது.
ஏற்கனவே முல்லைதீவு,திருகோணமலையில் தாமாக முனன்வந்து தமது எதிர்ப்பை பதிவு செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் அமர்வு நடந்த கட்டடத்தொகுதிக்கு வெளியேயே போராட்டங்களை நடத்தினர்.ஆனால் யாழில் உள்ளே புகுந்து அதிரடியாக தமது எதிர்ப்பை தெரிவித்த பின்னர் அமர்வை புறக்கணித்து வெளியேறியிருந்தனர்

No comments