ஈழ ஏதிலிகள் நாலாயிரம் பேர் நாடு திரும்புகின்றனர்!

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் ஏதிலிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது.

இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, பல தரப்புக்களும் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தன.அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் 28ஆம் நாள், தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தார்.

தலைமன்னாருக்கு கப்பல் மூலம்,  அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கில், அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments