அரச நிதியில் ஆடம்பர பங்களா - ஆர்னோல்டின் கனவைத் சிதைத்தார் விக்கி


யாழ் மாநகர முதல்வருக்காக உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எனும் பெயரில் ஆடம்பர மாளிகை ஒன்றினை மாதாந்த வாடகை அடிப்ப்யில் அரச நிதியில் பெற்றுக்கொள்வதற்கு யாழ் மாநக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மேற்கொண்ட முயச்சி வடக்கு மாகாண முதலமைச்சரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் என்ற கோதாவில் ஆடம்பரை பங்களா ஒன்றில் குடியிருக்க திட்டமிட்ட யாழ் மாநகர முதல்வர் இம்மானேவேல் ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் சுண்டிக்குழிப் பகுதியில் மாளிகை ஒன்றினைப் பார்த்து அதற்கு விலை பேசியிருக்கிறார். அதன் பின்னராக யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எனும் பெயரில் கோரியிருந்தார். இதனை சபை ஏற்றுக்கொண்டது. இதற்கமைய குறித்த சுண்டுக்குழிப் பகுதியில் பார்க்கப்பட்ட ஆடம்பர மாளிகையில் குடியிருக்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருக்கிறார்.

இருப்பினும் குறித்த வாடகை மாளிகை கொள்வனவிற்காக மாநகர சபை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக விண்ணப்பித்த நிலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் குறித்த விடயத்தினை வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரின் கவனத்திற்குகொண்டு சென்றிருக்கிறார். இதனை ஆராய்ந்த முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஏதும் தொடர்பில் சட்ட ஏற்பாடு கிடையாது எனத் தெரிவித்து குறித்த விடயத்தினை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயத்தை யாழ் மாநகர சபையின் அமர்வின்போது விவாதத்திற்குக் கொண்டுவந்து  முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள தமிழரசுக் கட்சியினர் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

No comments