கொழும்பில் இந்தியப் போர்க்கப்பல்


இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.

இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் உபால் குண்டு, சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்திய தளபதி றிழயர் அட்மிரல் நிசாந்த உலுகெத்தன்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதரக துணைப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி சேகர் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.

மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இந்தப் போர்க்கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்.



அதேவேளை, மாலைதீவு கடலோரக் காவல்படையின்,  ஹூராவி (Huravee) என்ற ரோந்துக் கப்பலும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மூன்று நாட்கள் பயணமாக கொழும்பு துறைமுகம் வந்துள்ள இந்தக் கப்பலும், நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளது.

No comments