திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர்த் திறப்பு 40 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்படவுள்ளது. இதனையடுத்துத் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று(23) திருச்சி மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இதுதொடர்பில் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 40,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது
திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லனை ஆகிய இடங்களில் மீட்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொதுமக்கள் ஆற்றில் இறங்கிக் குளிக்க வேண்டாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments