சம்பந்தன் ஒற்றையாட்சிக் கர்ஜனை - மாகாணசபைக்குள் அதிகாரப் பகிர்வு வேண்டும்


மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில், உரிய நேரத்தில் நடத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகிறேன். மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

மாகாணசபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறை தொடர்பான சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதம்  பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திரக்கிறார்.

இந்த நாட்டை பிரிக்க முடியாத ஐக்கிய நாடாக முன்நோக்கி கொண்டு செல்வதே எமது எதிர்பார்ப்பு. மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில், உரிய நேரத்தில் நடத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகிறேன். மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். நம்பகமான அதிகார பகிர்வை உருவாக்க இதவரை எங்களால் முடியாதுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு அறிமுகம் செய்யப்பட வேண்டும். புதிய அரசமைப்பு இன்றி எமக்கு எதிர்காலம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.

No comments