கிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்



வடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்து வரவேற்றிருந்தார். எனினும் விஜயகலாவை ரணில் கண்டுகொள்ளாது நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் விஜயகலா ஆற்றிய உரை ஒன்றின் பின்னராக அவருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க விஜயகலாவை தவிர்க்க முடிற்படுவதாக தெரியவந்துள்ளது.



கிளிநொச்சியில் எதிர்பாராத விதமாக விஜயகலா வெற்றிலை கொடுத்து ரணிலை வரவேற்றிருந்தாலும் யாழில் அவ்வாறு நடந்துகொள்ளாது தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரியவருகிறது.

எனினும் யாழிற்கு வந்திறங்கிய ரணிலை வரவேற்கக் காத்திருந்தபோதிலும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவிற்கு கைலாகு கொடுத்த ரணில் அரங்கு நோக்கிச் சென்றிருந்தார். ரணிலுக்கு அருகாக விஜயகலா வந்தபோதிலும் அவர் கண்டுகொள்ளாததுபோல் காட்டிக்கொண்டுள்ளார்.

இருக்கை வரிசையிலும் ரணில் இருந்த பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிய இருவருக்கும் அதிகாரிகளுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்ட பக்கத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

நிகழ்வு முடிந்து ரணில் வெளியேறியபோது சுகாதாரத் தொண்டர்கள் ரணிலிடம் வழங்கிய கடிதத்தினை கையளிப்பதற்காக தனது செயலாளரா ரணில் அழைத்தபோது விஜயகலா ரணிலருகில் சென்று தான் குறித்த கடிதத்தினை வாங்குவதற்கு முற்பட்டபோதும் அவரைக் கண்டுகொள்ளாத ரணில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறிஸ்கந்தராஜ பக்கம் திரும்பி அவருடன் உரையாடிவிட்டுச் சென்றுவிட்டார்.

No comments