Header Shelvazug

http://shelvazug.com/

விஜயகலாவை கைது செய்யுமாறு காவல்துறைத் தலைமையகத்தில் முறைப்பாடு

சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பினால் செய்யப்பட்டள்ள அந்த முறைப்பாட்டில், “ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.