வன்னியிலும் இராணுவத்திற்கு கூலியாட்கள் திரட்டல்!



யாழ்ப்பாணத்தை தொடர்ந்து முல்லைத்தீவு பகுதியிலும் இலங்கை படைகளிற்கு தமிழ் கூலியாட்களை திரட்ட படைத்தரப்பு மும்முரமாகியிருக்கின்றது.அவ்வகையில் விசுவமடு தொட்டியடிப்பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவின் 2ஆவது படைப்பிரிவினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்து மக்களிடம் இருந்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்னர் படையினரால் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு விசுவமடு தெட்டியடிப்பகுதியில் உள்ள 57 ஆவது படைப்பரிவின் 2ஆவது படைமுகாமில் தகவல் திரட்டு கொத்து படிவம் ஒன்றினை கொடுத்து பொதுமக்களிடம் இருந்தான விபரங்களை திரட்டியுள்ளனர்.

இதில் பெருமளவான மக்கள் தங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளதாகவும், படையினர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை படைகளால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்பு பிரிவு வன்னியில் செயற்பட்டுவருகின்ற நிலையில் தற்போது இலங்கை படைமுகாம்களில் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்த ஆயிரம் பேரை திரட்டும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments