டாண் சதியில் வீழ்ந்தாரா விசயகலா?

விடுதலைப்புலிகளது மீள் எழுச்சி பற்றிய விசயகலாவின் உரை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் தூண்டுதலில் அரங்கேற்றப்பட நாடகமென அவரது ஆதரவாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அமைச்சரான விசயகலா கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியினால் வழிநடத்தப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.அவரது ஆலோசர்களாக டாண் தொலைக்காட்சியின் சிற்றூழியர் வரை இருந்துவருகின்றனர்.

இந்நிலையில் மாணவி ரெஜினாவின் மரணத்தை அடுத்து ஏற்பட்ட கௌரவ இழப்பை சீர் செய்ய முன்னதாக வடமாகாண அமைச்சர் அனந்தியை அழைத்து டாண் தொலைக்காட்சி வெள்ளையடித்தது.

அதன் பின்னர் விசயகலாவுக்கு வழங்கிய ஆலோசனையினையடுத்து புலிக்கதைகள் சொல்லி மக்களிடம் ஆதரவை பெற்றுக்கொள்ள முற்பட்டனர்.விசயகலாவின் பேச்சினையும் குறித்த தொலைக்காட்சியே மீள மீள ஒளிபரப்பியது.

இந்நிலையில் சீனாவிடம் பணம் பெற்ற விவகாரம் மஹிந்த தரப்பிற்கு தலையிடியாக உருவெடுக்க அதனை திசை திருப்ப குறித்த தொலைக்காட்சி ஊடாக விசயகலாவை பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகம் வலுத்துள்ளது.
இதனிடையே தற்போது பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் விஜயகலா மகேஸ்வரன் டாண் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டு உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது அவுட்ஸ்பீக்கரில் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது தெரியுமாவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்  அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று ணிரச்சினைகள் முடிந்த பின் டான் தொலைக்காட்சிக்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவர அவசரம் இல்லை. 

அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன் அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது தெரியாது அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல். இவர் ஒரு பெண்ணை துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும் .

பாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே நான்உண்மையில் வெளியில் கொண்டுவரவிரும்புகின்றேன். இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் அதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாககத்தான் அது இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேனென தெரிவித்துள்ளார்.

No comments