மகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா?

முன்னாள் அமைச்சர்  மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதனை மூடி மறைக்க பலத்த முயற்சிகளை டக்ளஸ் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தெரிவிக்கையில் மகேஸ்வரனை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

ஆனால் அவர் பின்னர் டக்ளஸின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார்.கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் கூட டக்ளஸின் சகவான வரதசிங்கம் என்பவர் வேவு பார்க்க வந்திருந்தார்.அவருடன் கொலையாளியை டக்ளஸ் அனுப்பி வைத்திருந்ததாகவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

மகேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்ல பல தடவைகள் டக்ளஸ் முயன்றார்;.காரைநகரில் ,வேலணையிலென பல தடவைகள் கொலை முயற்சிகள் அரங்கேற்றப்பட்ட போதும் அவை வெற்றி பெற்றிருக்கவில்லை.
வர்த்தக ரீதியான போட்டி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இக்கொலை அரங்கேற்றப்பட்டது.டக்ளஸின் தம்பியாரான தயானந்தாவிற்கு கொலையில் பங்கிருக்கின்றது.அவர் மகேஸ்வரனிற்கு போட்டியாக அல்மீசா எனும் கப்பலை வைத்திருந்தாரெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

No comments