இலங்கை காவல்துறையின் காவலன் சுமந்திரன்!


இலங்கை அரசின் காவல்துறையின் கையாலாகத்தனத்தை கண்டிக்க வக்கற்றுள்ள ஏம்.ஏ.சுமந்திரன் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்கு உடனடியாக கிராம மட்ட விழிப்புக்குழுக்களை அமைத்து, இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமாறும், இளைஞர்களிடம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஓரிரு தினங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமென்ற நிலமை தற்போது எழுந்துள்ளது. அதேநேரம் பொலிஸாரும் தமது கடமையினை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்மையானது.

வன்முறைச் சம்பவங்களைச் செய்பவர்கள் எமது சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். ஆகையினாலே, ஒரு சமூக குற்றம் ஏற்படுகின்ற போது, அதனைத் குறித்த கரிசனை மற்றும் அவற்றினை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு எமது கையிலேயே இருக்கின்றது.

இந்த சமூகப் புரள்வுகளைக் கட்டுப்படுத்த விழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தோம். ஓவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் வழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டியதுடன், இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாய நிலமையும் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வன்முறைக் கலாசாரத்தினைப் புகழும் தன்மையினைத் தவிர்க்க வேண்டும். வன்முறைக் கலாசாரத்தினைப் புகழும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. அதன் பின்னர், இளைஞர்களை குறை கூறிப் பிரியோசனம் இல்லை.

வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும். வன்முறைகளைப் புகழும் கலாசாரத்தினை இனிமேல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்” எனவும் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கினில் சட்டமொழுங்கை பேண முடிந்த இலங்கை காவல்துறையால் வெடிபொருட்களுடன் முன்னாள் போராளிகளை வேட்டையாடி கைது செய்ய முடிந்த இலங்கை காவல்துறையால் சட்டமொழுங்கை பேணமுடியாதிக்கின்ற நிலையில் அதனை நியாயப்படுத்த விழிப்புக்குழுவென பிதற்ற தொடங்கியுள்ளாராவென்ற கேள்வி எழுந்துள்ளது. 

No comments