வரட்சியில் முல்லைதீவு:கோலாகல நிகழ்வில் அமைச்சர்கள்?


முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் வீழ்ச்சியமைந்துள்ளதென,  மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் எச்சரித்துள்ள நிலையில் கோலாகலமாக புதிய பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடத்தப்பட்டுள்ளது.

அரசுடன் நல்லிணக்கம் காட்டும் புளொட் சார்பு விவசாய அமைச்சர் மாத்திரம் பங்கெடுக்க நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் மங்கள சமரவீர,றிசாத் மற்றும் மஸ்தான் போன்ற மத்திய அமைச்சர்கள் படையெடுத்திருந்தனர்.

நல்லிணகத்தின் பங்காளியாக புளொட் தரப்பின் வடமாகாண அமைச்சர் தன்னிச்சையாக அதில் கலந்து கொண்டிருந்த போதும் ஏனைய கூட்டமைப்பின் தரப்புக்களை காணமுடியவில்லை.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால், விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அதேவேளை, மாவட்டத்தில் காணப்படும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களான வவுனிக்குளம், முத்துஐயன்கட்டுக்குளம் ஆகியவற்றில், இம்முறை சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் வரட்சி காரணமாக, இந்தக் குளங்களில் நீர் குறைவாகக் காணப்படுவதால், சிறுபோகச் செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ், 397.8 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஏனைய உப உணவுச் செய்கை, பழப் பயிர்ச்செய்கை என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இப்பயிர்ச் செய்கைகளும், வரட்சியால் ஓரளவுப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments