நாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்!



டெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி நாளை வடமாகாணசபை விசேட அமர்வுடன் கூடவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்த முடியாதவையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னைய பிரதம நீதியரசர் ஒருவருடன் அவரின் தலைமையின் கீழ் நான் அமர்வில் இருந்த போது அவர் தீர்மானம் ஒன்றை அமர்வில் இருந்து கொண்டே விடுக்க எத்தனித்தார். உடனே நான் இவ்வாறுதீர்மானம் அளித்தீர்களானால் நடைமுறைப்படுத்த முடியாது போய்விடும் என்றேன். 

அதன் பின் அத்தீர்மானம் திருத்தி வழங்கப்பட்டது. ஆகவே சில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதனால்த்தான் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் முன் வழக்கு இருக்கும் போது எந்தளவுக்கு அதன் உள்ளடக்கப்பொருள் பற்றி விமர்சிக்கலாம் என்பது மன்றாய்வில் கோட்பாட்டின் பால்ப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நான் மாகாணசபையின் கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் ஒப்புவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேனென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

No comments