கோத்தா கைது:கீத் நொயார் விவகாரம் தூசு தட்டப்படுகின்றது!

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படும் கோத்தபாயவினை உள்ளே போடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ரணில் மும்முரமாகியுள்ளார்.

அவ்வகையில் கோத்தாவின் உத்தரவையடுத்துகடத்திச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும், ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி) விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனரென, காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோத்தா கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கோத்தபாயவை கைது செய்வதிலிருந்து மைத்திரியே காப்பாற்றிவருவதாக ரணில் தரப்பு வாதிட்டுவருகின்றது.முன்னர் பிரகீத் எக்லியகொட விவகாரத்தில் கைதுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் இறுதி கட்டத்தில் மைத்திரி தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

இதனையடுத்து தற்போது கீத் நொயர் விவகாரத்தை முன்னிறுத்தி கைதுக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

No comments