மாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு!

“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளதால்,மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்படவேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்தவேண்டும்.” இவ்வாறு அண்மையில்  வடமாகாண  :அழககஅலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆனந்தராச உதயசங்கர் மற்றும் செயலாளர் கதிரமலை நககராசா ஆகியோருடனான சந்திப்பில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.


கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் அண்மையில் இடம் பெற்ற சந்தி;பபில் பாடசாலை மாணவர்களின் தலை முடி வெட்டுக்கள் விரும்பத்தகாத முறைகளில் வெட்டப்படுவது தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் பின்வரும் வகையில் செயற்படுவதாக அழகக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மாணவர்களின் தலைமுடிகளைச் சீர் செய்யும் பொழுது,பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக வடமாகாணத்தில் உள்ள தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவித்துச் செயற்படுத்துவதாகவும் உறுதி அளித்ததுடன்,.சில பெற்றோர்களே  தமது பிள்ளைகளைத்தவறாக வழி நடத்தும் வகையில், இவ்வாறானதலை முடி வெட்டுக்களை ஊக்குவிக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய மாணவர்களின்,தலைமுடிகட்டையாக வெட்டப்பட்டும் பின்புறம்“ப”வடிவத்தில் முறையாக வெட்டப்பட்டும் இருத்தல் வேண்டும்.

சேட் கொலரிலிருந்து தலைமயிர் 1 அங்குலத்திலும்  கூடிய இடைவெளியில் இருத்தல் வேண்டும்.

பக்கத் தோற்றம் “ப”வடிவத்தில் சீராக்கப்பட்டு காதுக்கு மேல் இருக்கவேண்டும்.அதன் கீழ் நீண்டிருக்க கூடாது.

தலைமுடியின் நீளம் அரை அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

தலையில் வரிகள்,வடிவங்கள் ஏற்படுத்துதல் முற்றாக தடை செய்யப்படுகின்றது.

பூசகர்கள் மற்றும் மத அனுஸ்டானங்களை நடத்துபவர்கள்,அவர்களுக்குரிய சம்பிரதாய சிகை அலங்காரம் மேற்கொள்ள முடியும்.
அதேவேளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தலைமுடியை இடதுபக்கம் உச்சி பிரித்து ஒழுங்காக அழகாக சீவப்பட்டிருப்பதுடன்,எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல்,சாயம்) பூசுவதும்,சென்ற் போன்ற செயற்கைவாசனைத் திரவியங்கள் பூசுவதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல்; வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்து தமது பிள்ளைகளைக் கட்டுப்பாடான முறையில் பாடசாலைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும் கூறப்படதுடன் பாடசாலைஆசிரியர்கள்,அதிபர்கள் ஆகியோரும்; இவற்றைத் தவிர்த்து,முன்மாதிரியாக இருந்து,மாணவர்களின் தலை முடி வெட்டுமற்றும் சீருடைகளில் கூட்டுப் பொறுப்புடன் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி. கந்தையாசர்வேஸ்வலரன் கேட்டுக் கொண்டுள்ளார்

No comments