விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்


தமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியாளரொருவர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப்புலிகள் மீளவும் உருவாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள், சட்டங்கள், மனித உரிமைக் குழுக்கள் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் போன்றவர்களின் செயற்பாடுகள் இதற்குமப்பால் இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை நடைமுறைகள் போன்று காணப்படுகின்றன.

விடுதலைப்புலிகளின் காலப் பகுதியில் குற்றமிழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாகவே தற்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டுக் கலாசாரம், சிறுமிகள் துஸ்பிரயோகம் போன்ற சமூகவிரோதச் செயல்கள் விடுதலைப்புலிகள் மீளவும் தோற்றம் பெற்றால் கட்டுப்படும். தாங்கள் நிம்மதியாக வாழ முடியுமென எமது மக்கள் கருதுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments