பதவி விலகினார் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் பதவி விலகியுள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விடயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

டேவிட்டின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் பதவிவிலகியுள்ள நிலையில் பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

No comments