கிரியை செய்ய ஒருமணிநேரம்:அரசியல் கைதியின் அவலம்!



  1. தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் ரணிலுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  2. கடந்த 18ம் திகதி புதன்கிழமை இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையின் இறுதிக்கிரியைகள் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது. மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

  3. தங்கவேல் சிவகுமார் அரசியல் கைதியாக 13 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

  4. 2006ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 10ஆம் திகதி கொழும்பு கரந்தெனிய பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

  5. சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஒரு மணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்றிருந்தனர். 


No comments