இன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்!

வன்னியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்க மேலும் ஆறு வருடங்கள் தேவையென இலங்கை அரசு கணித்துள்ளதாம். இதன் பிரகாரம் 2025இனில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட வெடி பொருட்களை முற்றாக மீட்டுவிட முடியுமென அரசு ஆரூடம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வன்னியில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள் ,வெடிப்பொருட்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 532,391 மீற்றர் நிலப்பகுதிகள் அகழப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், ஒரு தொகை யுத்த உபகரணங்கள் ஆகியனவே, நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யுத்தப் பயிற்சி முகாமொன்று பராமரிக்கப்படதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், மேற்படி இடத்தை அகழும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன்பின்னரே, இந்த யுத்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டனவென படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

படைத்தரப்பின் வெடிபொருள் தொடர்பான புதிய புதிய அறிவிப்புக்கள் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்வதற்கான அறிவிப்பாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடததக்கது.

No comments