அனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி? வெளிவரவுள்ளது ஆதாரங்கள்!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவுள்ளதாக மற்றொரு மாகாணசபை உறுப்பினரான அஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது விருப்பத்திற்குரிய தனிப்பட்ட செயலாளராக நியமிருந்த காத்தான்குடியை சேர்ந்த றிப்தி மொகமட் என்பவரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரி குறித்த கைத்துப்பாக்கியை அனந்தி பெற்றுக்கொண்டதாக சொல்லப்படுகின்றது. குறித்த நபரினூடாக பல தடைவ தெற்கின் அரசியல் தலைவர்கள் பலரை முதலமைச்சரிற்கு கூட தகவல் தெரியாதவகையில் அனந்தி சந்தித்து பேரங்களை நடத்தியமை தொடர்பிலும் தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக அஸ்மின் சவால் விடுத்துள்ளார்.

மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்களென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அஸ்மினிற்கு தெரிவித்திருந்தார்.

மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை. என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அனந்தி சசிதரன்   தெரிவித்திருந்தார்.

தேசியம் பேசி இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும்   வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்திருந்தார்.வடமாகாண சபையின் விசேட அமர்வு கடந்த  திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்ற வேளை அவர் இத்தகவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டமை தொடர்பான சான்றாதாரங்களை அடுத்த வடமாகாணசபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழரசுக்கட்சி நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

No comments