Header Shelvazug

http://shelvazug.com/

4ஆம் திகதி பாடசாலைகள், கல்வி அலுவலகங்கள் வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பு



இலங்கை கல்வித்துறையில் - அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்களுக்கு  1000 க்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும்.

இத்தகைய நியமனங்களை எதிர்த்து - இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். இப்பகிஸ்கரிப்பு வடமாகாணத்திலும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

மேலும் -
எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு - கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய முறையற்ற நியமனங்கள் - எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து - அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது - மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்புவிடுத்துள்ளார்.