கர்நாடகாவில் கனமழை எதிரொலி: தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில் 39,000 கன அடி நீர் திறப்பு

கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியாற்றில் வினாடிக்கு 39,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்ப ஒரு அடி மட்டுமே இருப்பதால் அணையில் இருந்து 35,000 கன  அடி நீர் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளவான 124.80 அடியில் தற்போது 110 அடி  நீர்மட்டம் உள்ளது. கனமழை தொடர்வதால் அணையில் இருந்து 4000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரி ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்களது விவசாய பணிகளை அவர்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments