2022-ம் ஆண்டுக்கான கால்பந்துப் போட்டி கட்டாரிடம் ஒப்படைப்பு

உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷியாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், வரும் 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ரஷ்ய அதிபரின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக்கோப்பை கால்பந்தை ஃபிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலகக்கோப்பைக்கான பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த அனுபவும் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார். 

No comments