விஜயகலாவிற்கும் ஆட்கடத்தலில் தொடர்பாம்?

வடக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதில் அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் முன்னின்று செயற்பட்டதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவருடன் அரசின் இராணுவம் மற்றும் கடற்படையின் உயரதிகாரிகள் சிலரும் தொடர்புபட்டிருந்ததானகவும் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டவிரோதமான முறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல  திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட  மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்  காலி நீதிமன்றம் நேற்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2012  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி,  சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு  இவர்கள் அழைத்துச் செல்லவிருந்த நிலையில், காலி தெற்கு கடற்படை  முகாம்  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

No comments