இலஞ்சம் வாங்கவேயில்லை: கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்!


தென்னிலங்கை மீனவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்கவில்லையென யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் மறுத்துள்ளார்.

இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் அலுவலகம் முன்பாக கூடிய மீனவர்கள் தென்பகுதி மீனவர்களை வெளியேற்று, தென்பகுதி மீனவர்களிடம் இலஞ்சம் வாங்காதேயென, கடற்றொழில் பணிப்பாளரை வெளியேற்று என கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் மீனவர்களை சந்திப்பதற்குகடற்றொழில் நீர்யல்வளத்துறையின் யாழ்.அலுவலக திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தார். பின்னர் ஒருவாறாக மீனவர்கள் சிலர் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அமைவாக மகஜரினை அவர் பெற்றுக்கொண்டார்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களமே வழங்கியிருந்தது.அத்துடன் வடக்கிலுள்ள பெரும்பாலான கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் கொழும்பு தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments