நானும் சமூக விரோதிதான்! ரஜினிக்கு கமல் பதிலடி!

போராட்டம் நடத்துபவர்கள்  சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பெங்களூரு புறப்பட்டுச் செல்லும்போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments