போராட தயார்: சுகிர்தனின் ஊடகப்பிரிவு அறிவிப்பு!


வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை விரட்ட நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு இயங்கவிடாமல் போராடுவோமென வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் அழைப்புவிடுத்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு(?) விடுத்துள்ள அறிவிப்பில் வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடில்களை அமைத்து தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள்.முறையற்ற வகையில் கடல் அட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களினை தட்டி கேக்கும் உள்ளூர் மீனவர்களை எரிப்பாங்களாம், சுடுவாங்களாம், கடத்துவாங்களாம். நம்ம ஊரிலேயே இப்பிடியெனில்  என கேள்வி எழுப்பியுள்ள அவர் இதற்கு மேலும், கடலட்டை பிடிப்பது தொடர்ந்தால், கடலட்டைக்கு அனுமதி கொடுத்த நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு இயங்கவிடாமல் போராடுவோமென அறிவித்துள்ளார்.

இதே அறிவிப்பினை அவரது அரசியல் குரு எம்.ஏ.சுமந்திரனும் விடுத்துள்ளதால் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இழுத்து மூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் தென்னிலங்கை மீனவர்களை வடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற வலியுறுத்தி உள்ளுர் மீனவர்கள் நடத்திய சந்திப்பில் தாழையடியுடன் தப்பித்து சுகிர்தன் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments