முதலமைச்சா் வேட்பாளா் யார் ? என இப்போது பேசவேண்டிய அவசியமில்லை என்கிறார் சம்பந்தன்



வடமாகாணசபைக்கு அடுத்த முதலமைச்சா் வேட்பாளராக தமிழ்தேசிய கூட்டமைப்பு யாரை நியமிக்கப்போகிறது? என்பது தொடா்பில் இப்போது தீா்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறியிருக்கும் எதிா்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், உாிய நேரத்தில் ஒற்றுமையாக கூடி ஒரு தீா்மானத்தை எடுப்போம் எனவும் கூறியுள்ளாா்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில் முடிவில் இரா சம்மந்தனிடம் ஊடகவியியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு சம்மந்தன் பதிலளித்திருந்தார். இதன் போது அடுத்த வடக்கு மாகாண சபையின் கூட்டமைப்பின்  முதலமைச்சர் யார் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலையே சம்மந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் வருமாறு

கேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தில் தீர்வொன்றைக் காண்பதற்கு தான் தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே அதற்கு வரவில்லை என்று முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச கூறியிருக்கின்றாரே

பதில் -  மகிந்த இப்போது பொய் பேசுகிறார். மகிந்த ராஐபக்ச ஆட்சியில் இருந்த போது பிரச்சனையைத் தீர்ப்பதற்காக் பேசிச் செய்ய வேண்டிய அத்தனை முயற்சியைiயும் தனிப்பட்ட வகையிலும் கட்சி ரீதியாகவும் நாங்கள் எடுத்திருந்தோம். ஆனால் அவர் அதனை உதாசீனம் செய்திரு;தார். நேர்மையாக நடக்கவில்லை. இப்ப திருந்தி முறையாக நடக்கச் சம்மதமாக இருந்தால் நாங்கள் அவருடன் பேசத் தயார் என்றார்.

கேள்வி – அமைச்சுப் பதவிகளை கூட்டமைப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளளரே

பதில் -  எங்களுக்கு நீண்ட காலமாக ஒரு கொள்கை இருக்கிறது அதாவது தந்தை செல்வா காலம் முதல் நாங்கள் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி ரீதியாக ஒருபொதும் அமைச்சை ஏற்கவில்லை. எமது மக்களுக்கு உரியது கிடைக்கும் வரை எமது மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் அமைச்சுப் பதவியைப் பெறுவதில் ஒருவிதமான பிரயோசனமும் இல்லை.

கேள்வி - ஐ.நா பேரவை சபையில் இருந்த அமெரிக்கா வெளியேறியமை இலங்கை அரசாங்கம் மீதான அழுத்த்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில் - ஐ.நா பேரவையில் சில கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாலேயே அமெரிக்கா அதிலிருந்து வெளியேறியிருக்கின்றது. அமெரிக்கா விலகினாலும் எங்களது கருமத்தில் அக்கறையாக தொடர்ந்தும் இருக்குமென நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு அக்கறையாக இருப்பதற்கு அமெரிக்காவை ஊக்குவிப்பதற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ஆனபடியால் என்னவிதமான நடவடிக்கைகள் நடைபெறப் போகிறதென்பதை நாங்கள் பொறுத்திருந்து அவதானிப்போம்.

அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வர வேண்டிய அவசரமில்லை. இது எங்களுக்கு பாதகமும் இல்லை. சாதகமும் இல்லை . அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வினம் என்றார்.

No comments