வன்னியில் அதிகரிக்கும் மனவழுத்தம்!

வன்னியில் 30 சதவீதமாக இருந்த மனவழுத்தம் கொண்டோரின் எண்ணிக்கை, யுத்தம் நிறைவடைந்த பின்னர் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக சிறார்களும் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் பெருமளவில் மன அழுத்தம் உள்ளிட்ட உளரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற போதும், இரண்டு உளவியலாளர்கள் மாத்திரமே இருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இயங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்றின் தகவலுக்கு அமைய, வடக்கு கிழக்கில் மாதாந்தம் 30 பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,அரசியல் கைதிகள் விவகாரம் ,குடும்ப தலைவர்கள் இழப்பு என பல காரணங்களால் இத்தகைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்கில் போதிய அளவு உளவியல் மருத்துவ நிபுணர்கள் இல்லாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டப்பட்டுவருகின்ற போதும் அது தொடர்பில் சுகாதார அமைச்சு அக்கறையற்றிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

No comments